(மருதமுனை செய்தியாளர் )

அரசியலுக்கு அப்பால் சமூக நலன் கருதி மருதமுனையில் காணப்படும் பொதுப் பிரச்சினைகள் தொடர்பாக சமூக நீதிக் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும்
மருதமுனை இளைஞர்கள் சிலருடன்
கலந்துரையாடல் ஒன்றை சமூக நீதிக் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் (09) மருதமுனை கிறீன் லீப் ரெஸ்ருரண்டில் மேற்கொண்டார்கள்.

இக்கலந்துரையாடலை தலைமை தாங்கி நடத்தினார் சமூக நீதிக் கட்சியின் தலைவரும் தெஹிவளை மாநகர சபையின் உறுப்பினருமான
அர்கம் முனீர் அவர்கள் இதன் போது அவர் தனது உரையில்
சமூக நீதிக் கட்சி இளைஞர்களுக்கான கட்சியல்ல சகலரையும் பிரதிநிதிப்படுத்தும் ஒரு கட்சியாகும்.

மக்களிடம் காணப்படும் பிரச்சினைகள் பேசு பொருளாக இருக்காமல் அதனை அரசியல் மயப்படுத்தி தீர்வுகாண வேண்டும். இதற்கு எங்களது கட்சியின் உதவியும் ஒத்தாசையும் என்றும் இருக்கும். அந்த வகையில் மருதமுனைக் கிராமத்தில் பல பிரச்சினைகள் இருந்தாலும் குறிப்பாக கடலரிப்பு மற்றும் மேட்டுவட்டைப் பிரச்சினைகள் கவனத்தில் கொள்ளப்பட்டு தீர்வுகள் காணப்பட வேண்டும். இதற்காக அனுபவசாலிகளை இணைத்து பயணிப்பதன் ஊடாக எமக்கு ஏற்படும் எல்லா விதமான பிரச்சினைகளையும் சுமூகமாக தீர்க்க முடியும்.

அதனைத் தொடர்ந்து பொது பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடல்கள் செய்யப்பட்டதுடன் வரும் காலங்களில் சமூக நீதிக் கட்சியுடன் இணைந்து பயணிக்க தாங்கள் ரெடியாக இருப்பதாக கலந்து கொண்ட இளைஞர்கள் சிலர் கருத்து தெரிவித்தார்கள்.

இக்கலந்துரையாடலில் சமூக நீதிக் கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி ரஷாத் அஹமட், பொருளாளர் சட்டத்தரணி இல்ஹாம் ஹசனலி, தேசிய ஒருங்கிணைப்பாளர் இர்பான் பன்னா, டிஜிட்டல் ஊடக செயலாளர் ஸப்ரீன் அஹமட், உறுப்பினர் சஜித் போன்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.