சர்வதேச மகளிர் தின நிகழ்வு பெண்களின் தலைமைத்துவம் ”செழிப்பான தேசத்தின் பெருமை” எனும் தொனிப்பொருளில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ரி.ஜே அதிசயராஜ் தலைமையில் 12.03.2026 நேற்று சிறப்பாக நடைபெற்றது.
மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவு, பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr.சகிலா இஸ்ஸதீன் பிரதம அதிதியாகவும் , கௌரவ அதிதிகளாக திருமதி மாதினி விக்னேஸ்வரன் ( அரச சட்டவாதி மேல் நீதிமனறம் கல்முனை , Dr.என்.ரமேஸ் கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி ஆகியோரும் , விசேட அதிதிகளாக திருமதி திலகராணி கிருபைராஜா பிரதி திட்டமிடல் பணிப்பாளர், AMS, அமிர் அலி கணக்காளர், M. ஜீவராஜ் நிர்வாக உத்தியோகத்தர், V.ஸ்ரீநாதன் சமுர்த்தி தலைமைப்பீட முகாமையார், AMS நயீமா சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர், A.அமலதாசன் கிராம நிர்வாக உத்தியோகத்தர் AS. .சிபாயா மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் Q. லோறன்ஸ் தெனாரன்ஸ் துணைத்தலைவர் SCSDO ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். இந் நிகழ்வின்போது மகளிருக்கான விளையாட்டுப்போட்டிகள், கௌரவிப்புக்கள் என்பனவும் இடம் பெற்றன.





