கல்வி மட்டுமன்றி ஏனைய இணைப்பாடவிதான செயற்பாடுகளான விளையாட்டு மற்றும் ஏனைய துறைகளில் ஆர்வம் காட்டி சிறந்து விளங்கியமையினால் பொறியியல் பீடத்திற்கு தெரிவாகியுள்ளார் கல்முனை கார்மேல் பற்றிமா தேசியபாடசாலை மாணவன் திருச்செல்வம் நிவலக்சன்

இவர் சிறப்பு தெரிவின் இணை பாடவிதானத்தில் திறமை காட்டிய பரீட்சார்த்திகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர் கராத்தேயில் பெற்றுக்கொண்ட தேசிய மட்ட சான்றிதழும் மற்றும் ஏனைய துறைகளில் பெற்றுக் கொண்ட ஏனைய சான்றிதழ்களின் அடிப்படையில் தற்பொழுது பொறியியல் பீடத்திற்கு தெரிவாகி இருப்பது பாராட்டத்தக்க விடயமாக காணப்படுகின்றது.


இந்த மாணவனின் பாடசாலை கராத்தே பயிற்சி ஆசானாகிய பாலுராஜ் தனது வாழ்த்துக்களையும் மகிழ்சியையும் தெரிவித்தார்.