முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை 72 மணித்தியாலங்கள் (3 நாட்கள்) தடுத்து வைத்து விசாரிக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு (CID) அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரை இன்று (27) கம்பஹா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதைதைத் தொடர்ந்து, விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க நீதவான் குறித்த அனுமதியை வழங்கியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்கப்பட்ட துப்பாக்கி காணாமல் போனமை தொடர்பாக இடம்பெற்று வரும் விசாரணைக்கமைய நேற்று (26) அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.