பாண்டியூரான் குழும நிவாரணப்பணியில் நீங்களும் இணையலாம்!
நாட்டில் ஏற்பட்ட பாரிய இயற்கை அனர்த்தத்தால் மக்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். பாண்டியூரான் குழுமம் சார்பாக அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இயன்ற மனித நேயப்பணி செய்வாற்காக நிவாரணப்பொருட்களை சேகரிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது
ஆகவே இயன்ற உதவிகளை செய்ய முன்வருமாரும் மக்களுக்காக நிவாரணப் பொருட்கள் பாண்டிருப்பு மாரியம்மன் கோவிலுக்கு அருகாமையில் சேகரிக்கப்படுவதாகவும் கல்முனை நெற்றுக்கு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
உங்களால் முடிந்த உலர் உணவுகள் , தண்ணீர் போத்தல்கள், நல்ல நிலையில் உள்ள பாவிக்க கூடிய துணிகள் ஆடைகள் , போர்வைகள் உங்களால் முடிந்தவரை வந்து ஒப்படைக்குமாறும் கேட்டுக்கொள்கின்றனர்.
தொடர்புகளுக்கு. 0760070099, 0774124338
