ரணிலின் முன்னாள் ஆலோசகர் கைது !

முன்னாள் நிதி அமைச்சின் செயலாளரும், ரணில் விக்ரமசிங்க 2015இல் பிரதமராக இருந்தபோது சிரேஷ்ட ஆலோசகராக இருந்தவருமான சரித ரத்வத்தே இன்று இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கைது நடவடிக்கை, 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஒரு கொள்வனவு தொடர்பான விசாரணைக்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சிரேஷ்ட ஆலோசகராக ரத்வத்தே கடமையாற்றிய காலப்பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

இலங்கை அரசு வர்த்தகக் கூட்டுத்தாபனம் மூலம் சுமார் 90 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான செலவில் 50 தற்காலிக கிடங்குகளை இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் கொடுக்கல் வாங்கல் தொடர்பிலேயே சரித ரத்வத்தே கைது செய்யப்பட்டுள்ளார். CIABOC அதிகாரிகள் அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ARVLoshanNews