புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் பிரதமர் ஹரிணி கல்முனை சம்மாந்துறை ஆசிரியர்களுக்கு விளக்கம்!
(வி.ரி. சகாதேவராஜா)
நாட்டின் பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய புதிய கல்வி சீர்திருத்தம் குறித்து கல்முனை மற்றும் சம்மாந்துறை கல்வி வலய ஆசிரியர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு நிந்தவூர் அல் – அஸ்ரக் தேசிய பாடசாலையில் நேற்று (2) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹுதுல் நஜீம் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது
கல்வித்துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
அதில் உரையாற்றிய பிரதமர்;
கல்வியானது ஏற்றத்தாழ்வின்றி சகலருக்கும் கிடைக்க வேண்டும். எல்லோருக்கும் கல்வியின் சுவையினை அனுபவிக்க கொடுப்பதே புதிய கல்விச் சிர்திருத்தத்தின் நோக்கமாகும். இதனை அடைந்து கொள்வதற்கு ஆசிரியர் உள்ளிட்ட சகல தரப்பினரும் ஒன்றிணைந்து செயலாற்ற முன்வர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
பிரதமர் ஹரிணி அமரசூரியவோடு பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, பாராளுமன்ற உறுப்பினர்கள் அபூவக்கர் ஆதம்பாவா, மஞ்சுல சுகத் ரத்நாயக்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் நினைவாக பிரதமர் மரக் கன்று ஒன்றினையும் வைத்தார்.
பிரதமர் ஆசிரியர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
பிரதமர் ஹரிணி அமரசூரிய பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் நினைவுப் பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.





