நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர்   பதவி  நீக்கம்

  பாறுக் ஷிஹான்
 
நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினரான ஆதம்பாவா அஸ்பர்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.


இதற்கு அமைய ஆதம்பாவா அஸ்வர் வகித்து வந்த நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர் பதவியை இழந்துள்ளதாக நிந்தவூர் பிரதேச சபைக்கான தெளிவத்தாட்சி அலுவலர் கசுன் ஸ்ரீநாத் அத்தநாயக்க வர்த்தமானி அறிவித்தல் மூலம்   பிரகடனப்படுத்தியுள்ளார்.

இது குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கான பிரகடனத்தில் நிந்தவூர் பிரதேச சபைக்கான தெரிவித்தாட்சி அலுவலர் கடந்த 24ஆம் தேதி ஒப்பமிட்டு வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.