PSDG 2025 நிதி ஒதுக்கீட்டில் மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் ஆரி வேலை பயிற்சி நெறி ஆரம்பம்.
கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக ஏற்கனவே ஆறு மாத கால சான்றிதழ் பயிற்சிநெறியை பூர்த்தி செய்த பயிற்சியாளர்களை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் வியாபார மற்றும் சந்தைப்படுத்தல் நுட்பங்களை உள்ளடக்கியதான 10 நாள் பயிற்சியானது நேற்று வெள்ளிக்கிழமை (2025.10.31) கோறளைப்பற்று மேற்கு தையல் பயிற்சி நிலைய கட்டடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் பஸீஹா முஜீப் தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் A. ஜுமானா ஹஸீன், மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் B. கோகுலராஜன் மற்றும் .சிரேஷ்ட. தையல் போதனாசிரியை Mrs நிவேதிதா ரவிச்சந்திரன், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி S. துஸ்யானந்தன் கோ.ப.மே ஓட்டமாவடி அபிவிருத்தி உத்தியோகத்தர் MFB. சபீலா, கோ.ப.மத்தி தையல் போதனாசிரியை MNF. ஸஹிகா, கோ.ப.மேற்கு ஓட்டமாவடி தையல் போதனாசிரியர் SN. அன்சார் வாழைச்சேனை தையல் போதனாசிரியை Mrs. றாகீலா நஜீம்
அதிதிகளாக கலந்து கொண்டதுடன் பயிற்சியாளர்களுக்கு ஆரிவேலைக்கான உபகரணங்களையும் வழங்கி வைத்தார்கள்.

