(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கவிஞர்கள் கவிபாடும் சிறப்பு கவியரங்கு சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் (07) நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றது.

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணை மற்றும் வழிகாட்டலில், ‘வத்ஸர பியவர’ எனும் கலாசார வேலைத்திட்டத்தில், சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் கலாசார உத்தியோகத்தர் றஸ்மி மூசாவின் நெறிப்படுத்தலில், சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம். றம்ஸான் தலைமையில் இடம்பெற்ற இக்கவியரங்கில் சாய்ந்தமருதில் உள்ள பிரபல சிரேஷ்ட மற்றும் இளம் கவிஞர்கள், கவிதாயினிகள் கவிதை பாடினர்.

‘போதை ஓர் சமூகச் சீர்கேடு’ எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இக்கவியரங்கில், யூ.எல். ஆதம்பாவா, எம்.ஏ.சி. சித்தி ஜெஸீனா, ஏ.எச். சுபையில் அஸீஸ், எம்.ஏ.சி.எம். பாயிஸ் கரீம், எம்.ஆர். ஐகிபானு, யூ.எல். நூறுல் ஹுதா, எம்.ஏ.சி. சாஹிர் கரீம், என்.எம். அலிக்கான், எம்.சி. றிஹானா பேகம், எம்.ஐ. நளீம், அஸ்வான் சக்காப் மௌலானா, எம்.ஐ.எம். அஷ்ரப் ஆகியோர் சிறப்பான முறையில் கவிதை பாடியதோடு, இதற்கு கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் முன்னாள் அதிபரும் ஓய்வுபெற்ற கோட்டக்கல்விப் பணிப்பாளருமான ஏ. பீர்முகமது நடுவராக மத்தியஸ்தம் வகித்து சிறப்பாக வழி நடாத்தினார்.

இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரீ.எம். றிம்ஸான், சமூர்த்தி தலைமைபீட உத்தியோகத்தர் ஏ.சி.ஏ. நஜீம், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஏ.சி.முஹம்மட், நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எஸ். நளீர், கலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.எம். தௌபீக், முஸ்லிம் கலாசார உத்தியோகத்தர் யூ.எல். முஹம்மட் றிபாஜ், சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையப் பொறுப்பதிகாரி ஏ.பி. நௌஸாத், பிரதேச கலாசார அதிகார சபையின் தலைவர், பிரதித்தலைவர் உட்பட அதன் உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கலைஞர்கள், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் எனப் பலரும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

இறுதியாக கவிபாடிய அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.