பெரியநீலாவணை – மருதமுனை நகரில் “சரோஜா ” சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வு
(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
பெரியநீலாவணை – மருதமுனை நகரில் “சரோஜா” சிறுவர் பாதுகாப்பு திட்டம் தொடர்பான ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வும் விழிப்புணர்வும் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் வழிகாட்டல் மற்றும் அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார், கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி லசந்த களுவாராய்ச்சி ஆகியோரின் ஆலோசனை – வழிகாட்டலுக்கு அமைய பெரியநீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.கஜேந்திரன் தலைமையில் இந்த நிகழ்வு (28) நடைபெற்றது
சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு எதிராக குரல் கொடுங்கள் என்ற வாசகம் அடங்கியதும் அவசர சிறுவர் பாதுகாப்பு தொடர்பிலான முறைப்பாடுகளை தெரிவிக்க 109 மற்றும் 107 ஹொட்லைன் இலக்கம் அடங்கிய ஸ்டிக்கர்களும் நகரில் உள்ள முச்சக்கர வண்டிகளில் ஒட்டப்பட்டு விழிப்பூட்டப்பட்டது.
இந்த நிகழ்வில் ‘சரோஜா’ என்ற பெயரில், சிறுவர் பாதுகாப்பு குறித்தும் முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு தெளிவூட்டப்பட்டது. இதில் பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்து பொலிஸார் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.










