கல்முனை நூலகத்தில் வாசிப்பு மாத நிகழ்வு
(அஸ்லம் எஸ்.மெளலானா)
2025-ஒக்டோபர் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கல்முனை பிரதேசத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையே “மறுமலர்ச்சிக்காக வாசிப்போம்” எனும் தொனப்பொருளில் கல்முனை பொது நூலகத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட பேச்சுப்போட்டி வியாழக்கிழமை (30) நடைபெற்றது.
நூலகர் ஹரீஷா சமீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை வலயக் கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர் எம். லக்குணம் நடுவராக கடமையாற்றினார்.
இதன்போது பேச்சுப்போட்டிக்காக மாணவர்களுக்கு பயிற்சியளித்த ஆசிரியர்களும் வருகை தந்திருந்ததோடு நூலக உத்தியோகாத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.
கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபியின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு அமைவாக கல்முனை மாநகர சபைக்குட்பட்ட நூலகங்களில் வாசிப்பு மாத நிகழ்வுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


