நாவிதன்வெளியில், போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான “ரட்ட ம எகட்ட” விழிப்புணர்வு
(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில்
(30) தேசிய ரீதியாக ஆரம்பித்து வைக்கப்படட்ட
போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான “ரட்டம எகட்ட” முழு நாடுமே ஒன்றாக எனும் தேசிய செயற்பாடு நாவிதன்வெளி பிரதேச செயலகத்திலும் (30.10.2025) முன்னெடுக்கப்பட்டது.

பிரதேச செயலாளர் திருமதி ராகுலநாயகி சஜிந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அலுவலக உத்தியோகத்தர்கள் விழிப்புணர்வு பதாகை ஏந்தியவாறு அலுவலகத்தின் பிரதான முன்றலில் இருந்து நாவிதன்வெளி – சவளக்கடை பிரதான வீதியூடாக விழிப்புணர்வு பேரணியாக சென்று மீண்டும் அலுவலகத்திற்கு வருகை தந்தனர். இதன் போது நாட்டில் புரையோடிப் போய் உள்ள போதைப் பொருள் அச்சுறுத்தலை இல்லாமல் செய்வதற்கான உறுதி உரை வாசிக்கப்பட்டது. போதைப்பொருள் உற்பத்தி,விநியோகம், விற்பனை, ஊக்குவிப்பு மற்றும் அவற்றுக்கு உடந்தையாக இருத்தலை முற்று முழுதாக நிராகரிப்போம்.  என்றும் அத்துடன் தொடர்பான நபர்களை சட்டத்தின் முன் நிறுத்த உதவுவோம் என்ற உறுதி உரையை வாசித்து அதனை மொழிந்து ஏற்றுக் கொண்டனர்.

 ‘போதைப்பொருள் பேரழிவை ஒழிப்பதற்கான ‘ முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு’ தொடர்பில் பிரதேச செயலாளர் விழிப்புணர்வு உரையை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்வில் பிரதேச செயலகத்தின் கணக்காளர் கே.எம். றிஸ்வி யஹ்சர், சமூர்த்தி தலைமை பீட முகாமையாளர் எஸ்.சிவம், தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ஹனா ஜெஹீர் உட்பட பிரதேச செயலகத்தின் திணைக்கள பிரிவுகள் ரீதியாக கடமையாற்றும் சிரேஷ்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்