பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று , இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில்,
இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கல்வி, பெண்களுக்கு அதிகாரமளித்தல், புதுமை, அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் நமது மீனவர்களின் நலன் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் நாங்கள் கலந்துரையாடினோம். நெருங்கிய அண்டை நாடுகளாக, நமது இரு நாட்டு மக்களின் செழிப்புக்கும், பகிரப்பட்ட பிராந்தியத்திற்கும் நமது ஒத்துழைப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என பதிவிட்டுள்ளார்.


