கரூர் சம்பவத்தில் விஜய்யை குற்றவாளியாக ஆக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என  பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோதே இவ்வாறு கூறியுள்ளார்.

கரூர் சம்பவத்தில் விஜய்யை குற்றவாளியாக ஆக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியல் ஆசைக்காக வேண்டுமானால் விஜய்யை ஓரிரு நாள் கைது செய்து, பின்னர் விடுவிக்கலாம என்றும் தெரிவித்துள்ளார்.

தவெக, விஜய்க்கு அடைக்கலம் கொடுக்க, பாதுகாக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை எனவும், தவெக நிர்வாகிகள் மீது தவறுகள் இருப்பது உண்மைதான்.அதற்காக விஜய்யை குற்றவாளியாக ஆக்க முடியாது.