கல்முனை வலயக் கல்விப் பணிமனையில் நடைபெற்ற வாணி விழா!
கல்முனை வலயக் கல்விப் பணிமனையில் வாணி விழா 02.10.2025 வியாழக்கிழமை அலுவலக கேட்போர் கூடத்தில் சிற்ப்பாக நடைபெற்றது.
திருமதி வரணியா சாந்தரூபன் ( பிரதிக் கல்விப் பணிப்பாளர் – திட்டமிடல்) அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக வலயக் கல்விப் பணிப்பாளர் சஹதுல் நஜிம் அவர்களும் , பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், மாவட்ட பொறியியலாளர்கள் ,கணக்காளர் ,கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் ,உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், நிருவாக உத்தியோகத்தர்கள், அதிபர்கள் ,ஆசிரியர்கள், வளவாளர்கள் ,அலுவலக உததியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் பஜனைகள் பூசை வழிபாடுகள் என்பன சிறந்த திட்டமிடலுடன் இடம் பெற்றன.













