கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் கிரிகெட் அணி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.
கல்முனை நிலைய பொலிஸ் அதிகாரிகளுக்கும் கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் கிரிகெட் அணிக்கும் இடையிலான கிரிகெட் போட்டியில் 7ஓட்டங்களால் கல்முனை சட்டத்தரணிகள் சங்க கிரிகெட் அணி வெற்றி பெற்றது.நாணய சுழற்சியின் வெற்றி பெற்ற பொலிஸ் அணி முதலில் களத்தடுப்பாட தீர்மானித்தது.அதன் அடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய சட்டத்தரணிகள் அணியானது 12ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 73 ஓட்டத்தினை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பொலிஸ் அணி 65 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து சுருண்டது.சட்டத்தரணிகள் அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய சட்டத்தரணி ஜெமில் ஜாவீட் அவர்கள் 5விக்கெட்டுக்களை கைப்பற்றி இருந்தது.குறிப்பிடத்தக்கது.

குறித்த போட்டியின் பிரதம அதிதியாக மேல் நீதிபதி கௌரவ ஜெயராமன் ரொஸ்க்கி அவர்களும்
மேலும் கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் கௌரவ சாஜித் கலாம் அவர்களும்
கல்முனை சட்டத்தரணிகள் சங்கத் சிரேஷ்ட சட்டத்தரணி தலைவி ஆரிக்கா காரியப்பர் அவர்களும்
சிரேஷ்ட சட்டத்தரணிகள் என பலர் கலந்து கொண்டனர்.




