ஜெனிதா மோகன்
மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்
பிரதேச செயலகம்
கல்முனை

யொகாரி எனும் உளவியலாளரினால் முன்வைக்கப்பட்ட மனிதன் பற்றிய நான்கு பக்கங்க பக்கங்களை உள்ளடக்கிய சட்டகம் என்பதால் இது யோகாரி சட்டகம் எனப்படுகிறது.

அதாவது ஒவ்வொரு மனிதனுக்கும் நான்கு பக்கங்கள் உண்டு. அதனை யொகாரி எனும் உளவியலாளர்
01.குருட்டு மூளை
02.இருட்டு மூளை
03.திறந்த மூளை

  1. மூடிய மூளை என்று நான்காக பிரித்து பல்வேறு கருத்துக்களை முன்வைக்கிறார்.

அதாவது எனக்குத் தெரியாதது மற்றவருக்கு தெரியுமாக காணப்படும் நிலை குருட்டு மூளை என்றும் எனக்கும் தெரியாது மற்றவருக்கும் என்னை தெரியாது என்பதை இருட்டு மூளை என்றும் திறந்த மூளை என்பது எனக்கும் என்னை தெரியும் மற்றவருக்கு என்னை தெரியும் எனும் நிலையாகும். மறைக்கப்பட்ட மூளை என்பது எனக்குத் தெரியும் மற்றவருக்கு தெரியாது எனும் வகையில் நான்கு பக்கங்களை ஒவ்வொரு மனிதனும் கொண்டுள்ளார் என்று கூறுகிறார்.

அதாவது எனக்கும் தெரியும் மற்றவருக்கு என்னை தெரியும், எனக்குத் தெரியாதது மற்றவருக்கு தெரியாது, எனக்கு தெரிந்தது மற்றவருக்கு தெரியாதது, எனக்கும் தெரியும் மற்றவருக்கும் தெரியும் என்பது போன்ற விடயங்களை இந்த சட்டகம் ஊடாக தெளிவாக எடுத்துக் காட்டுகிறார்.

மனித மூளையின் ஏழு வீதம் தான் மனிதர்கள் உபயோகிக்கின்றனர் என்றும் 93 வீதமானவை உபயோகிக்கப்படவில்லை என்பதும் விஞ்ஞானிகளின் கருத்து ஆகும்.

ஒவ்வொரு மனிதனுக்கும் இரகசியங்கள் காணப்படும். அது மறைக்கப்பட்ட மூளை ஆகும். இந்த இரகசியமங்களை மற்றவர்கள் அறியும் போது சோற்றினை ஒரு மடுவினில் போட்டு மூடிய பின் குறிப்பிட்ட காலங்களுக்கு பிறகு அந்த இடத்தில் ஒரு குழியினை தோண்டும் போது தூர் நாற்றம் வீசும். அது போன்று மறைக்கப்பட்ட சில இரகசியங்கள் வெளியில் வரும்போது அது அவருக்குரிய வாழ்க்கையை பாதிக்கும். எனவே இரகசியங்கள் ஒவ்வொரு மனிதனுக்கும் மறைக்கப்பட்டு காணப்படுகிறன. அந்தரங்களை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தும் போது தான் அதிகமான தற்கொலைகள் இடம் பெறுவதனை சமூக ஊடகங்களின் ஊடாகவும் அறிய முடிகிறது. காரணம் தெரியவில்லை என்று கூறப்படும் தற்கொலைகளுக்கும் இரகசியங்கள் அம்பலமாகி விடுமோ என்ற அச்சங்களும் காரணமாக இருக்கலாம்.

திறந்த மூளை என்பது எனக்கும் என்னை தெரியும் மற்றவருக்கும் என்னை தெரியும், எனக்குத் தெரியாதது மற்றவருக்கு தெரியும் என்பது குருட்டு மூளை ஆகும். எனக்கும் தெரியாது மற்றவருக்கும் தெரியாது இருட்டு மூளை ஆகும். மறைக்கப்பட்ட மூளையானது எனக்குத் தெரியும் மற்றவருக்கு தெரியாதது ஆகும்.

திறந்த மூளை அல்லது மறைக்கப்பட்ட மூளையிலிருந்து நாங்கள் வேலை செய்ய தொடங்க வேண்டும். திறந்த மூளை எல்லோருக்கும் தெரிந்ததாக இருக்கும். மறைக்கப்பட்ட மூளையிலிருந்து நாங்கள் எமது பணியினை தொடங்க முடியும். இடம், பொருள், ஏவல் பார்த்து கதைப்பதற்கு தொடங்க வேண்டும்.

எனக்கும் தெரியாது மற்றவருக்கும் தெரியாது இருக்கும் மூளை மறைக்கப்பட்ட மூளை ஆகும். இந்த மறைக்கப்பட்டிருக்கும் மூளையில் திறமைகள் அடிமனதில் ஆழமாக இருக்கும் போது சந்தர்ப்பங்கள் அல்லது தேவைகள் வரும் போது இருவருக்கும் தெரியாத புதிய திறமைகள் வெளிப்படும்.

ஒரு மனிதனுக்கு திறந்த மூளை அதிகமாகவும் குருட்டு மூளை குறைவாகவும் மறைக்கப்பட்ட மூளை குறைவாகவும் இருட்டு மூளை மறைக்கப்பட்ட மூளை அளவும் காணப்படும் போது அவருடைய வாழ்க்கை மிகவும் நன்றாக அமையும்.

எப்போதும் ஒத்துணர்வுடன் ஒருவரது பிரச்சினைகளை நோக்கும் போது எங்களை அவர்களது இடத்தில் வைத்து பார்க்க வேண்டும். அப்போதுதான் தனக்கு அந்த பிரச்சினை என்றால் அதனை எப்படி பார்ப்பேன். அதனால் எத்தகைய தாக்கத்தை எதிர் கொண்டு இருப்பேன், எத்தகைய மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பேன் என்று நினைத்தால் மற்றவருக்கு எத்தகைய வழிகாட்டிகளை செய்ய முடியும் என்ற எண்ணம் வரும். எனவே அனுதாபம் காட்டுவதை விட ஒத்துணர்வு ஊடாக நோக்குதல் நன்றாக இருக்கும்.

ஜெனிதா மோகன்
மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்
பிரதேச செயலகம்
கல்முனை