தகவல்விசு.கணபதிப்பிள்ளை -கனடா

உலகத் தமிழ் வாசகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஐரோப்பா வாழ் எழுத்தாளர் கோவிலூர் செல்வராஜனின் நூல்களின் அறிமுக விழா கடந்த 25-05-2024 அன்று கனடா ஸ்காபுறோ நகரில் சிறப்பாக நடைபெற்றது.

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவில் இடம்பெற்ற மேற்படி விழாவிற்கு தற்போதை தலைவர் எழுத்தாளரும், கவிஞருமான அகணி சுரேஸ் தலைமை தாங்கினார் .

வாழ்த்துரைகளை கனடா உதயன் பத்திரிகையின் ஆசிரியர் .நா. லோகேந்திரலிங்கம், எழுத்தாளர் அ. தேவதாசன், இசைக்கல்லூரி நிறுவனரும் அதிபருமான திருமதி சுகல்யா இரகுநாதன், எழுத்தாளரும் ஊடகருமான .சாமி அப்பாதுரை ஆகியோர் நிகழ்த்தினார்கள்.

இவரது நூல்களின் நயவுரைகளை பல்வைத்திய கலாநிதியும் திறனாய்வாளருமான மேரி கியூரி போல் , எழுத்தாளரும் முன்னாள் கொத்தணி அதிபருமான தங்கராஜா சிவபாலு , எழுத்தாளரான குரு அரவிந்தன் , எழுத்தாளரும் பேராசிரியருமான சிந்தனைப் பூக்கள் பத்மநாதன் ஆகியோர் நிகழ்த்தினார்கள். (27 கேஸ்பிரிட்ஜ் கோர்ட் யுனிட்- 5 )என்னும் விலாசத்தில் அமைந்துள்ள ‘பைரவி நுண்கலைக் கூட கலாசார மண்டபத்தில் மண்டபம் எழுத்தாளர்கள் விருந்தினர்கள் பார்வையாளர்களால் நிறைந்திருந்தது

கோவிலூர் செல்வராஜன் ஒரு ஈழத்து பாடகர், நடிகர், கவிஞர் மற்றும் பத்திரிகை ஆசிரியர். இவரது இயற்பெயர் செல்வராஜன் ராசையா. இவரது முதலாவது சிறுகதை தொகுப்பு ‘விடியாத இரவுகள்’ஆகும். இவர் இதுவரை நாவல்,சிறுகதை, கட்டுரை என பதினைந்து நூல்களை வெளியிட்டுள்ளார்.இவரது நூல்கள் இலங்கையிலும், ஐரோப்பிய நாடுகளிலும் ,கனடா, ஆவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் வெளியிடப்பட்டுள்ளன.

இவர் இலங்கை வானொலியில் பல நாடகங்களில் பங்கேற்று நடித்துள்ளார். வானொலிப் பாடகராக இருந்ததோடு இசையமைப்பாளராகவும் திகழ்ந்தார். இலங்கை வானொலியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும், அறிவிப்பாளராகவும் விளங்கினார். தினகரன் பத்திரிகையில் இவரது படகுத்துறை அருகினிலே – 1975இ லாவண்யா ஒரு முற்றுப்புள்ளி – 1978 இளமைக் கோவில் ஒன்று – 1977 ஆகிய நாவல்களும் எழுதினார். சிந்தாமணி வீரகேசரி தினகரன் பத்திரிகைகளில் நிறைய சிறுகதைகளும் லண்டன் – மேகம் புதினம் நோர்வே – பறை பாரிஸ் – ஈழநாடு ஈழமுரசு கல்முனை நெற்றின் பரிமாணம் ஆகிய பத்திரிகைகளில் இவரது சிறுகதைகளும் கவிதைகளும் பாடல்களும், கட்டுரைகளும் பிரசுரமாகியுள்ளன.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நிரந்தரப் பணியாளராக பல்துறைக் கலைஞராக இருந்த இவர் புலம் பெயர்ந்த பின்னரும் தான் சார்ந்திருந்த துறைகளில் பிரகாசித்தார்.பாடல் ஆசிரியராக படகராக இசையமைப்பாளராகவும் இருக்கும் இவர் பல இறு வட்டுகளை இவர் தயாரித்து வெளியிட்டு உள்ளார்

.தனது ஊரான திருக்கோவில் பிரதேசத்தில் இருக்கின்ற கோவில்களுக்கு பக்தி பாடல்கள் அடங்கிய இறுவட்டுகளை உருவாக்கியுள்ளார்.இவர் பல விருதுகளை வாங்கி உள்ளார்.அவற்றில் ஆவுஸ்திரேலியா கனடா இந்தியா ஆகிய நாடுகளிலுள்ள கலை இலக்கிய அமைப்புகளால் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.


அன்றிலிருந்து இன்று வரைதொடர்ச்சியாக எங்கே கொண்டிருக்கும் கோவிலூர் செல்வராஜனின் இலக்கியப் பணி தொடர வாழ்த்துகிறோம்.
கனடாவில் அறிமுகம் செய்யப்பட்ட மூன்று நூல்களின் கோலிலூர் செல்வராஜன் எழுதி கல்முனை நெற் ஊடக வலையமைப்பினால் தாயகத்தில் வெளியிடப்பட்ட கிலக்கிலங்கையின் மறைந்த இலக்கிய ஆளுமைகள் நூலும் உள்ளடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

விசு.கணபதிப்பிள்ளை
கனடா