கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், நாவிதன்வெளி பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் புரட்டாதி மாத பௌர்ணமி கலை விழா 12.09.2025 வெள்ளிக்கிழமை இன்று நடைபெறவுள்ளது.
அன்னமலை வடபத்திரகாளி கோவில் முன்றலில் இன்று மாலை 4.30 மணிக்கு நாவிதன்வெளி பிரதேச செயலாளர் திருமதி ராகுலநாயகி சஜிந்ரன் தலைமையில் நிகழ்வுகள் ஆரம்பமாகும்.
பிரதம அதிதியாக சூரியகுமார் பார்த்தீபன் ( உதவி பிரதேச செயலாளர் – மண்முனை தென்மேற்கு -பட்டிப்பளை) அவர்களும், சிறப்பு அதிதியாக திருமதி எஸ்.நிருபா (உதவி பிரதேச செயலாளர் நாவிதன்வெளி) அவர்களும், சிறப்பு அதிதிகளாக பேகராசா பிரணவரூபன் ( முன்னாள் உதவி பிரதேச செயலாளர் நாவிதன்வெளி), ரெட்ணம் சுவாகர் (உதவிபிரதேச செயலாளர் – ஆலையடிவேம்பு) அவர்களும் ,கௌரவ அதிதிகளாக ஏ.எல் தௌபிக் ( மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்), எம்.தர்மலிங்கம் (நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயம்) ,ஏ.சர்மிலராஜ் ( கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்) ,க.தியாகராஜா (அதிபர் கலைமகள் வித்தியாலயம் – வேப்பையடி) ,கே.பிரபாகரன் (இளைஞர் சேவை உத்தியோகத்தர்) ,எஸ்.செல்வசிகாமணி (ஓய்வுநிலை அதிபர் – சிரேஷ்ட எழுத்தாளர்) ,கே.கிலசன் ( அறிவிப்பாளர், ஊடகவியலாளர்), ச.ருவதரன் ( சமூக ஆர்வலர்) ,எஸ்.தேவராசா ( தலைவர் அன்னமலை வடபத்திர காளி கோவில்) ,ஏ.ரஜிவன் ( தலைவர் சக்தி இளைஞர் கழகம் ) ,வி.தனுஸ்ரன் ( தலைவர் கிராம அபிவிருத்திச் சங்கம்), எம்.கோவிந்தன் ( தலைவர் சக்தி விளையாட்டுக்கழகம்) ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
உள்ளுர் கலைஞர்களின் பல்வேறு வகையான சிறப்பு நிகழச்சிகள் இடம்பெறவுள்ளன.
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர்.;