ரணில் விக்கிரமசிங்க நீதிமன்றத்தில் ஆஜராகுவதில் நிச்சயமற்ற நிலை: காணொளி மூலம் ஆஜராக வாய்ப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவது குறித்து நிச்சயமற்ற நிலை நிலவுவதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க, ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு பணிகளுக்காக அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைபவர்களின் வழக்கு எண்கள் சரிபார்க்கப்பட்டு, அவர்களது பயணப் பொதிகள் மற்றும் நபர்கள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
மேலும், கியூ வீதியில் வசிப்பவர்கள் மற்றும் சட்டத்தரணிகள் மட்டுமே அந்த வீதிக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர்.
பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டின் பேரில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதான வழக்கு இன்று (26) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
மருத்துவர்கள் அவரைத் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) வைத்திருக்க அறிவுறுத்தியுள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நீதிபதி உத்தரவிட்டால், அவரை ‘சூம்’ (Zoom) காணொளி அழைப்பு மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ஏற்பாடுகள் செய்யப்படலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.