தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் கராத்தே போட்டிகளில் பங்குபற்றி தங்கப்பதக்கங்களை தனதாக்கிய கராத்தே வீரர் கல்முனை சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த சௌந்தரராஜா பாலுராஜ் இம்மாதம் நடைநடைபெற்ற 49 ஆவது தேசிய கராத்தே போட்டியில் பபங்குபற்றி தொடர்ச்சியாக 10 தடவை தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
கடந்த மாதம் 49 வது மாகாணமட்ட கராத்தே போட்டியில் 35 வயதிலும் தொடர் 18வது தங்கம் வென்ற சௌந்தரராஜா பாலுராஜ் சர்வதேச ரீதியில் மூன்று தங்கப்பதக்கங்களைப்பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த போட்டியுடன் தனது ஓய்வை அறிவிக்கவுள்ளதாக கல்முனை நெற்றுக்கு தெரிவித்தார். தொடர்ச்சியாக 10 பதக்கங்களைப் பெற்ற பாலுராஜ்க்கு வாழ்த்துக்கள்.
இவரின் பயிற்றுவிப்பாளர் S முருகேந்திரன் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.