பிரதேச செயலாளராக பதவி உயர்வு பெற்றுச் செல்லும் பார்த்திபனுக்கு காரைதீவில் இன்று பாராட்டு, கௌரவம்!

( வி.ரி.சகாதேவராஜா)

காரைதீவு உதவி பிரதேச செயலாளராக இருந்து, தெஹியத்தகண்டிய பிரதேச செயலாளராக பதவி உயர்வு பெற்றுச் செல்லும் எஸ். பார்த்திபனுக்கு, சேவைநலன்பாராட்டு நிகழ்வு, ஊர் சார்பில் இன்று (15) வெள்ளிக்கிழமை காலை  நடைபெற்றது.

காரைதீவு பிரதேச செயலாளர் பொறியியலாளர் ஜி. அருணன் தலைமையில் காரைதீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இந்த ஊர் சார்பிலான நிகழ்வை, காரைதீவு அறங்காவலர் ஒன்றியமும் , சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த பணிமன்றமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன .

பிரதேச செயலாளராக பதவி உயர்வு பெற்றுச் செல்லும் திரு.பார்த்திபனின் அர்ப்பணிப்பான சேவைகள் தொடர்பாக, அறங்காவலர் ஒன்றியத் தலைவர் இரா.குணசிங்கம் , செயலாளர் சி.நந்தேஸ்வரன், சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த பணிமன்ற ஆலோசகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா , செயலாளர் கு.ஜெயராஜி,உப தலைவர்  எஸ்.சிவராஜா ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். 

பிரதேச செயலாளர் ஜி.அருணனும் வாழ்த்துரை வழங்கினார்.

நிறைவில் பார்த்திபன் பல பொன்னாடைகள் போர்த்தப்பட்டு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு பாராட்டப்பட்டார்.

சுவாமி விபுலானந்த அடிகளாரின் திருவுருவப் படம் பொறித்த படம் அங்கு நினைவு பரிசாக வழங்கப்பட்டது .

பிரதேச செயலாளர் பார்த்திபன் ஏற்புரை வழங்கினார்.