நாவிதன்வெளியில் ஊடக கல்வியை தொடரும் உயர்தர மாணவர்களுக்கு பயிற்சி செயலமர்வு

(ஏ.எல்.எம்.ஷினாஸ், றாஸிக் நபாயிஸ், முஜீப் சத்தார்)

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் அம்பாறை மாவட்ட செயலகத்தின் வழிகாட்டலுடன் நாவிதன்வெளி பிரதேச செயலகம் ஏற்பாடு செய்து நடாத்திய  நாவிதன்வெளி கோட்ட பாடசாலைகளில் உயர்தர பிரிவில் வெகுஜன ஊடகம் தொடர்பான பாடத்தினை பிரதான பாடமாக கற்கும் மாணவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி செயலமர்வு நாவிதன்வெளி பிரதேச செயலாளர் திருமதி ராகுலநாயகி சஜிந்திரன் தலைமையில் நாவிதன்வெளி பிரதேச கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதேச செயலகத்தின் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.ஷினாஸ் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கையை ரூபவாஹினி கூட்டுத் தாபனத்தின் செய்தி வாசிப்பாளரும் அறிவிப்பாளருமான மசூர் அன்ஸஹான், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் பிறை எப்.எம் அறிவிப்பாளரும் எழுத்தாளரும் நாடக கலைஞருமான, அதிபர் ஜே. வஹாப்தீன், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தரும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பாளருமான ஏ.எல்.எம்.ஷினாஸ் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊடக தொழில்நுட்ப கருவிகள், ஊடகத்தின் பயன்பாடுகள், ஊடக தொழில்நுட்ப கருவிகளை மாணவர்களின் கற்றல் உபயமாக பயன்படுத்தும் வழிமுறைகள், தொலைக்காட்சி ஒலி, ஒளிபரப்பு ஊடகத்தின் செயல் திறன்கள், ஊடகமும் மொழியாற்றிலும் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

நிகழ்வின் இறுதியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு கலாசார  சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் பி. பிரணவரூபன், ஊடகவியலாளர்களான றாஸிக் நபாயிஸ், முஜீப் சத்தார், கிழக்கு மாகாண பண்பாண்டல்கள் திணைக்களத்தின் கலாசார உத்தியோகத்தர் திருமதி ரகுலநாயகி கலாசார உத்தியோதர், இந்து கலாசார உத்தியோகத்தர் சறோஜினி, மத்தியஸ்த அபிவிருத்தி உத்தியோகத்தர் உள்ளிட்ட அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.