கிழக்கு மாகாணத்தில்  காரைதீவு இலங்கை வங்கிக்கிளை முதலிடம் பெற்று சிறந்த கிளையாக தெரிவு

( வி.ரி.சகாதேவராஜா)

கிழக்கு மாகாணத்தின் சிறந்த இலங்கை வங்கிக் கிளையாக காரைதீவு இலங்கை வங்கிக்கிளை முதலிடம் பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளது .

கிழக்கு மாகாணத்திலுள்ள “பி” மற்றும் “சி” தர இலங்கை வங்கிக் கிளைகளிடையே நடத்தப்பட்ட 5எஸ் ஸ்பிரிட் விருதுக்கான போட்டியில் முதல் இடத்தை காரைதீவுக் கிளை பெற்றுக் கொண்டது .

இதற்கான விருது வழங்கும்  விழா  அண்மையில் கொழும்பில் நடைபெற்றது .

காரைதீவு இலங்கை வங்கிக்கிளையின் முகாமையாளர் திருமதி. யாழினி மோகனகாந்த் 

அந்த விருதைப் பெற்றுக்கொண்டார் .

காரைதீவு இலங்கை வங்கிக் கிளையில் முகாமையாளருடன் ஆக மூன்றே மூன்று உத்தியோகத்தர்கள் பணிபுரிகிறார்கள். திருமதி.எம். தனுப்பிரியா, பி. ராஜபக்ச, எம். சில்வா ஆகியோரே இவ்வாறு அர்ப்பணிப்புடன் பணிபுரிகிறார்கள் .

இந்த குறைந்த ஆளணியுடன் நிறைந்த சேவையை வழங்கும் காரைதீவு இலங்கை வங்கிக்கிளை மாகாணத்தில் முதலிடம் பெற்று விருது பெற்றமையையிட்டு  ஊர் மக்கள் அங்கு சென்று முகாமையாளரையும் அங்கு பணிபுரியும் ஊழியர்களையும் பாராட்டி வருகின்றனர். நேற்று ஊர் மக்கள் சார்பில் சிரேஸ்ட ஊடகவியலாளர் வி.ரி.சகாதேவராஜா சென்று முகாமையாளரை வாழ்த்தி ஊழியர்களையும் வாழ்த்தியிருந்தார்.

குறித்த 5 எஸ் ஸ்பிரிட் விருது வழங்கும் போட்டியானது வருடா வருடம் நடத்தப்பட்டு வருகின்ற ஒன்று. கடந்த வருடம் தம்பலகாமம்  வங்கிக்கிளை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.