கிழக்கு மாகாண விளையாட்டு விழாவில் களுதாவளை கெனடி விளையாட்டு கழகம் சாதனை – 2025
விளையாட்டு அமைச்சும் கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களமும் இணைந்து நடத்துகின்ற கிழக்கு மாகாண விளையாட்டு விழாவானது கந்தளாய் லீலாரத்ன விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் ஆரம்பமாகி நேற்று முடிவடைந்தது
இவ்விளையாட்டு போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டுள்ள களுதாவளை கெனடி விளையாட்டு கழக வீர வீராங்கனைகள்
06 தங்கப்பதக்கம்
06 வெள்ளிப்பதக்கம்
03 வெண்கலப் பதக்கம் அடங்கலாக 15 போட்டி நிகழ்வுகளில் வெற்றி பெற்று 15 வீர வீராங்கனைகள் தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மெய்வல்லுனர் போட்டிகளில் பெற்ற பதக்கங்கள் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் கெனடி விளையாட்டு கழகம் முதலிடம்
இப்போட்டியில் தில்லைநாயகம் குகப்பிரியன் கோலூன்றி பாய்தல் நிகழ்வில் கடந்த 2016 ஆண்டு வைக்கப்பட்டிருந்த 3:40M என்ற உயரத்தை கடந்து
கிழக்கு மாகாண புதிய சாதனையான 3:45M பாய்ந்து புதிய சாதனை புரிந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது
அதேபோல் கிழக்கு மாகாண சிறந்த மெய்வல்லுனர் வீராங்கனையாக கெனடி விளையாட்டு கழகத்தைச்சேர்ந்த பு.ரக்சனா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கெனடி விளையாட்டு கழக வரலாற்றில் அதிகூடிய பதக்கங்களை மாகாணத்தில் பெற்று இம்முறை சாதனை படைப்பு.