தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் திருத்தும் முதற்கட்ட பணிகள் ஆரம்பம் – செப்டம்பர் 20க்குள் பெறுபேறுகளை வெளியிடவும் திட்டம்


நேற்று 10 ஆம் திகதி நடந்து முடிந்த தரம் ஐந்தாம் புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் ஆரம்ப மதிப்பீட்டுப் பணிகள் பணிகள் இன்று ஆரம்பமாகும் எனவும் பெறுபேறுகள் செப்டம்பர் 20க்குள் வெளியீடு செய்யப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் 2,787 நிலையங்களில் பரீட்சை நடத்தப்பட்டன, இதில் 379,951 மாணவர்கள் பரீட்சைக்குத் தகுதி பெற்றிருந்தனர் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், இந்திக லியனகே தகவல் வெளியிட்டிருந்தார்.


விடைத்தாள் திருத்துவதற்கான அனைத்து ஆயத்த கூட்டங்களும் வழிகாட்டுதல்களும் நிறைவடைந்துள்ள நிலையில், திருத்தும் பணிகள் ஆகஸ்ட் 22 முதல் 27 வரை 43 நிலையங்களில் நடைபெறும் எனவும் செப்டம்பர் 20-க்குள் பெறுபேறுகளை வெளியிட திணைக்களம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.