வீரச்சோலை கிராம பெயர்ப் பலகை தகர்ப்பு !

தவிசாளர் ரூபசாந்தன் ஸ்தலத்திற்கு விரைவு

( வி.ரி. சகாதேவராஜா)

நாவிதன்வெளி- சம்மாந்துறை பிரதேச எல்லைக் கிராமமான வீரச்சோலை கிராமத்தின் பெயர் பலகை  இனந்தெரியாதோரால் தகர்க்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறை – சொறிக்கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள குறித்த பெயர்ப்பலகை கூரிய ஆயுங்கள் கொண்டு தகர்ப்பட்டுள்ளது.

இதனை நாவிதன்வெளி பிரதேச சபைத் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன்  நேற்று ஸ்தலத்திற்கு நேரடியாகச்சென்று பார்வையிட்டார்.

இதனை தொடர்ந்து அவர் ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்.

தமிழ் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழும் இந்த பிரதேசத்தில் இவ்வாறான விஷமத்தனமான செயற்பாடுகள் இனங்களுக்கிடையே முரண்பாடுகளை தோற்றுவிக்கும் செயற்பாடாக அமையும் . இவ்வாறான விசமத்தனமான செயற்பாடுகள் மூலம் இன நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியாது எனத் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தெரியப்படுத்தினார்.

இதன்போது நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் கோபாலசிங்கம் உதயகுமார், நாவிதன்வெளி பிரதேச சபை செயலாளர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.