சித்தானைக்குட்டி சுவாமியின் 74வது குரு பூஜையின் முத்துச்சப்பர வீதியுலா இன்று!

(  வி.ரி.சகாதேவராஜா)

சித்தருள்சித்தர் ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 74 ஆவது குருபூஜையின் முத்துச்சப்பர வீதியுலா இன்று(30) புதன்கிழமை காரைதீவில் நடைபெறவுள்ளது.

காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி ஆலயத்தில் குருபூஜையும் அன்னதானமும் 

 எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 01 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற உள்ளது.

அதற்காக சுவாமிகள் முத்து சப்புறத்தில் இன்று 30 ஆம் தேதி புதன்கிழமை வீதி வலம் வருவார்.

நாளை 31 ஆம் தேதி வியாழக்கிழமை காலை சித்தர் ஆலயத்தில்  சமயதீட்சை வழங்கப்படவுள்ளது.

மேலும்  கோமாதா பூஜை, 210 சித்தர்களுக்கான வேள்வி, அன்னதானம் மற்றும் திருவிளக்கு பூஜை என்பன நடைபெற இருக்கின்றன.

மறுநாள் 01 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஆயிரக்கணக்கான அடியார்கள் மத்தியில் 74வது குரு பூஜையும் அன்னதானமும் நடந்தேறஇருக்கின்றது.

02 ஆம் தேதி சனிக்கிழமை வைரவருக்கான இடும்பன் பூஜையுடன் குருபூஜை நிறைவடையும் என ஆலய பரிபாலன சபையின் செயலாளர் சு.கணேஸ் தெரிவித்தார்.