கல்முனை ஆதார வைத்தியசாலையின் ஏற்பாட்டில் Clean beach program
( வி.ரி. சகாதேவராஜா)
Clean Sri Lanka நிகழ்ச்சி திட்டத்திற்கு அமைவாக கல்முனை ஆதார வைத்தியசாலை சூழல் சுற்றாடல் பாதுகாப்பு செயற்பாடுகளின் ஓர் அங்கமாக இன்று 26.07.2025 சனிக்கிழமை Clean Beach Program ஒன்றினை ஒழுங்கு செய்திருந்தது.
இந்நிகழ்வானது வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் குணசிங்கம் சுகுணனின் ஆலோசனைக்கு அமைவாக இடம் பெற்றது.
இந்நிகழ்வின் போது வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.








