யாழ்ப்பாணத்தில் சுவாமி விபுலானந்த அடிகளாரின் வாழ்க்கை சரிதமடங்கிய கண்காட்சி!
சபாநாயகர் ஜகத் அங்குரார்ப்பணம்
( வி.ரி.சகாதேவராஜா)
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் சுவாமி விபுலாநந்தரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான கண்காட்சியினையும், திணைக்களத்தினால் வெளியிட்டுள்ள புத்தகங்களின் விற்பனையும் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றன.
இதனை இலங்கையின் பாராளுமன்ற சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன நேற்றுசனிக்கிழமை மாலை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் ய.அனிருத்தனன் தலைமையில் நடைபெற்ற இக் கண்காட்சி யாழ்ப்பாணம்
நல்லை திருஞான சம்பந்தர் ஆதின கலாசார மண்டபத்தில் நடைபெற்றது .
ஆயிரக்கணக்கான மக்கள் சென்று பார்வையிட்டனர். திணைக்களம் வெளியிட்ட நூல்களையும் வாங்கி பயன் பெற்றனர்.






