பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள் சந்திப்பு
பாறுக் ஷிஹான்
சுகாதாரதுறையினை வினைத்திறனுடன் முன்னெடுக்கும் நோக்கில் கல்முனை பிராந்தியத்தில் உள்ள உள்ளுராட்சி மன்ற தலைவர்களை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் இன்று (12) சந்தித்து கலந்துரையாடினார்.
பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டுப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிரின் நெறிப்படுத்தலில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி முதல்வர் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, திருக்கோவில், நிந்தவூர், நாவிதன்வெளி, காரைதீவு ஆகிய பிரதேச சபைகளின் தவிசாளர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது திண்மக் கழிவகற்றல், டெங்கு ஒழிப்பு, பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உட்பட வைத்தியசாலைகளின் வளப்பற்றாக்குறை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் பின்தங்கிய கிராமங்களில் வாழும் மக்களின் சுகாதாரத் தேவைகள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.











































