பெரிய நீலாவணை ஸ்ரீ மஹா பெரிய தம்பிரான் ஆலய மகா கும்பாபிஷேகம் நாளை (11) ஆரம்பம்
கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தின் வடக்கு எல்லை கிராமமான பெரிய நீலாவணை கிராமத்தின் மத்தியில் அமர்ந்திருந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ மஹா பெரியதம்பிரான் ஆலய மகா கும்பாபிஷேகம் நாளை (11) ஆரம்பமாகின்றது.
கர்மாரம்பம் – 11 / 07 / 2025 (வெள்ளிக்கிழமை)
பால்காப்பு -12 / 07 /2025 (சனிக்கிழமை)
கும்பாபிஷேகம் – 13 /07 / 2025 (ஞாயிற்றுக்கிழமை)
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 11 நாட்கள் மண்டலாபிஷேக பூசையும், 12ஆம் நாள் 24 / 07 /2025 அன்று (வியாழன்) சங்காபிஷேகமும் நடைபெறும்.
ஸ்ரீ மஹா பெரியதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம் 30/07/ 2025 புதன்கிழமை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி 05 / 08 / 2025 தீர்த்த உற்சவத்துடன் திருவிழா நிறைவுபெற உள்ளது.
எனவே மெய்யாடியார்கள் அனைவரும் திருவிழா காலங்களில் ஆலயத்திற்கு வருகை தந்து பெரியதம்பிரானின் அருள் பெற்றேகுமாரு அன்புடன் அழைக்கின்றனர். ஸ்ரீ மகா பெரிய தம்பிரான் ஆலய பரிபாலன சபையினர்.

