நற்பிட்டிமுனை வேலன் தொண்டர்படையால் கதிர்காம யாத்திரையை முன்னிட்டு அன்னதான ஏற்பாடு!
இந்துக்களின் புனித யாத்திரைகளில் ஒன்றான கதிர்காம ஆலயத்திற்கான காட்டுவழி பாத யாத்திரை உகந்தை மலை முருகன் ஆலயத்தில் இ இருந்து எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரை மேற்கொள்வார்கள். இதன் போது பல்வேறு அமைப்புக்கள் தாகசாந்தி, அன்னதான பணிகளை முன்னெடுப்பது வழமை. அந்த வகையில் நற்பிட்டிமுனை வேலன் தொண்டர் படையும் யாத்திரிகர்களுக்கான அன்னதானப்பணியினை முன்னெடுப்பதற்குரிய ஏற்பாடுகளை செய்துவருகின்றனர்.
வேலன் தொண்டர் படையால் நற்பிட்டிமுனை மக்கள் சார்பாக எதிர்வரும் 23 , 24 , 25 ஆகிய மூன்று தினங்களில் உகந்தை மலை முருகன் ஆலயத்தில் மாபெரும் அன்னதான பணியை முன்னெடுக்கவுள்ளனர். இதற்கு ஒத்துழைப்பு வழங்க விரும்புவோர் தொடர்புகொள்ள முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
தொடர்புகளுக்கு 0778500165 – 0764812526 – 0770238379

