கார்மேல் பற்றிமாவில் புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா!

-அரவிந்தன்-

கல்முனை கார்மல் பற்றிமா தேசிய பாடசாலையின் ஆண்டு ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றி சித்தி அடைந்த மாணவர்களுக்கு விருது வழங்குகின்ற விழா இன்று (24) இடம் பெற்றது.

பாடசாலையின் முதல்வர் அருட் சகோதரர் S.E. ரெஜினோல்ட் Fsc. தலைமையில் இடம்பெற்ற இன்றைய நிகழ்வின் பிரதம அதிதியாக கல்முனை கல்வி வலையத்தின் முகாமைத்துவ பிரிவுக்கு பொறுப்பான பிரதி கல்வி பணிப்பாளர் U.L. ரியால் மற்றும் கௌரவ அதிதியாக அம்பாறை பிராந்திய சுகாதாரப் பணிமனையின் கணக்காளர் திருமதி. சுதர்சனா சிவகுமார் ஆகியோருடன் விசேட விருந்தினர்கள் மற்றும் விசேட அழைப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இன்றைய பரிசளிப்பு விழாவில் 2024ம் கல்வியாண்டின் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் மாகாண மட்டத்தில் முதலிடத்தை பெற்றுக் கொண்ட மாணவி உட்பட அரசால் நிர்ணயிக்கப்பட்ட 70க்கு மேல் புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட 209 மாணவர்கள் சான்றிதழ் மற்றும் நினைவுச் சின்னங்களை பெற்றுக் கொண்டதுடன் இதில் 64 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்தும் இருந்தனர்.

இன்றைய நிகழ்வை மாணவர்களுடன், ஆசிரியர்கள் அதிகவான பெற்றோர்கள் என அனேகர் கலந்து கொண்டு சிறப்பித்திருந்ததுடன் இந்நிகழ்வு பாடசாலையின் 125 ஆண்டு நிறைவையொட்டிய நிகழ்வுகளின் நிகழ்ச்சி நிரலில் ஓர் அங்கமாக இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.