நாளை உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் விபரமடங்கிய வர்த்தமானி வெளிவரும்!
( வி.ரி.சகாதேவராஜா)
உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாளை (23) வெள்ளிக்கிழமை வெளியிடப்படும்.
161 உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாளை வெளியிடப்படும் என, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனை இன்று தெரிவித்தார்.
எஞ்சியுள்ள 178 உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களின் பெயர் விபரங்களை அனுப்பி வைக்குமாறு, தொடர்புடைய கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
