அதிசயம் ஆனால் உண்மை! இந்திய சுவாமியை திருக்கோவிலுக்கு வரவழைத்த முருகன்! உண்மைச் சம்பவம்;கோபுர அமைப்பிற்கு உதவி!

(  வி.ரி.சகாதேவராஜா)

இந்திய சுவாமிகள் கனவில்  முருகன் தோன்றி தரிசனமளித்து கூறியதற்கமைவாக  அவர் இலங்கை வந்து அம்பாறை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில் ஆலயத்துக்கு வந்துள்ளார்.

இந்தியாவின் ஆந்திரா பிரதேசத்தில் பல ஆதீனங்களுக்கு பொறுப்பாக இருக்கும் சுவாமி ராமானந்த  சரஸ்வதி என்ற சுவாமியே இவ்விதம் திருக்கோவிலுக்கு விஜயம் செய்ய ஈர்க்கப்பட்டவராவார் .

நடந்தது இதுதான்..

இந்தியாவிலுள்ள சுவாமிகளுக்கு ஒருநாள் அவரது கனவிலே முருகப் பெருமான் தோன்றி இலங்கையிலே கடலுக்கு அருகே  ஒரு முருகன் ஆலயமுள்ளது. அவ் ஆலயத்தின் ராஜகோபுரம் அரைகுறையாக கிடக்கிறது. அதனைச் சென்று பார்த்து அதனை நிவர்த்தி செய்வாயாக என்று தோத்திரம்( வாக்கு)  அளித்திருக்கின்றார்.

 முருகப்பெருமான் கூறிய ஆலயம் எதுவென்று தெரியாமல் 

சுவாமிகள் பலருடனும் தொடர்பு கொண்ட பொழுது பலனளிக்கவில்லை.

 குறித்த ஆலயம் இலங்கையினல் எப் பாகத்தில் இருக்கின்றது என்பதனை அறிய முடியவில்லை .

இறுதியாக கதிர்காம பாதயாத்திரீகர்களுடனா ஒருவாறு தொடர்பை ஏற்படுத்தி அவர்களூடாக அது அம்பாறை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில்  சித்திர வேலாயுத சுவாமி ஆலயம் என்று தெரியவந்தது.

அதன் பின்னர் திருக்கோவில் ஆலய குரு சிவஸ்ரீ அங்குசநாதக் குருக்களோடு நேரடியாக தொடர்பு கொண்டார் சுவாமி.

அங்கு தான் அந்த முதல் தொடர்பு ஏற்படுகின்றது.

  திருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தின் ராஜகோபுரம் பல வருடங்களாக அரைகுறையாக காணப்படுகின்றது என்று செய்தி அவருக்கு கிடைக்கப்பெறுகின்றது .

மறுகணமே அவர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்து முதல் தடவையாக அம்பாறை மாவட்டத்திலுள்ள திருக்கோவிலுக்கு விஜயம் செய்தார்.

 அங்கு சென்று ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் மற்றும்  குரு சிவஸ்ரீ அங்குசநாதக் குருக்கள் மற்றும் தலைவர் சு.சுரேஸ் தலைமையிலான ஆலய நிர்வாகத்தினரை சந்தித்தார் .

குறித்த இராஜகோபுர தளத்திலேயே ஏறி நின்று இதனை எவ்வாறாவது முடித்தாக வேண்டும் இதற்குரிய ஏற்பாடுகளை நான் செய்கின்றேன் என்று கூறி 

இந்த தள அமைப்பு வேலைகளுக்காக முதற்கட்டமாக நாற்பது லட்சம் ரூபாவை தருகிறேன் என்றார்.

குருக்களும் ஆலய நிர்வாகத்தினரும் அசந்து போனார்கள்.

 சொன்னது போன்று இதுவரை  10 லட்சம் ரூபாய்  வழங்கி இருக்கின்றார் . விரைவில் மீதியும் வந்துசேரவிருக்கிறது.

இந்தியாவிலே வடகோடியிலிருந்தத சுவாமியை இலங்கைக்கு அதுவும் திருக்கோவிலுக்கு அழைத்த முருகப்பெருமானின் இந்த அற்புதத்தை என்னவென்று சொல்வது ?

அவர் மூன்றாவது தடவை கடந்த வாரம் நேரடியாக வந்து ஆலயத்தை தரிசித்து அங்குள்ள அடியார்களுக்கு நிதியும் வழங்கி அன்னதானமும் வழங்கினார்.

 நிர்வாகத்தினருடன் அளவளவாவிய காட்சிகளை இங்கு  காணலாம்.