”இளம் சிட்டுக்களின் ராகம்” நிகழ்ச்சி சாகரம் இசைக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது. பாடும் திறமையுள்ள சிறார்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் சாகரம் இசைக்குழுவின் இந்த முயற்சி பாராட்டத்தக்கது.

கடந்த மாதம் 20 ஆம் திகதி நடைபெற்ற குரல்தேர்வு போட்டிக்கு 48 சிறார்கள் பங்குபற்றியிருந்தார்கள். இதில் முதற்கட்டமாக 15 சிறார்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

முதற்கட்டமாக தெரிவு செய்யப்ட்ட சிறார்களுக்கு சங்கீத ஆசிரியர்கள் ஊடாக பயிற்சிகள் வழங்கப்பட்டு ”இளம் சிட்டுக்களின் ராகங்கள்” இசை நிகழ்ச்சி மிகவும் பிராமாண்டாக நடை பெற திட்டமிடப்பட்டுள்ளதாக சாகரம் இசைக்குழுவினர் கல்முனை நெற்றுக்கு தெரிவித்த்னர்.

சிறார்கள் முழுமையாக பயிற்றப்பட்ட பின்னர் இசை நிகழ்ச்சி தொடர்பான விபரங்கள் அறிவிக்கப்படும்