மற்றுமொரு ஈழத்தமிழர் அவுஸ்ரேலியா பாராளுமன்ற உறுப்பினராக இன்று தெரிவானார்.

யாழ்ப்பாணம் நாவற்குழியை பூர்வீகமாக கொண்ட அஷ்வினி அம்பிகைபாகர் (கவிஞர் அம்பியின் பேத்தி) ஆஸ்திரேலியா சிட்னி Barton தொகுதியி்ல் தொழிற் கட்சி சார்பில் போட்டியிட்டு, 66 சதவீதத்துக்குமேல் வாக்குகள் பெற்று வெற்றியீட்டி, ஆஸ்திரேலிய பாராளுமன்றம் செல்கிறார்.

குழந்தை கவிஞன் என போற்றப்படும் கவிஞர் அம்பி எனப்படும் இராமலிங்கம் அம்பிகைபாகன் அவர்கள் தனது 94 வயதில் அவுஸ்திரேலியாவில் கடந்த வருடம் ஏப்ரல் 28 இயற்கை எய்தினார்.

இதேபோல் கடந்த வாரம் கனடாவில் மூன்று ஈழத்தமிழர்கள் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.!

-பா.அரியநேத்திரன்-
03/05/2025