திருக்கோவிலில் சுயேட்சை சசிகுமாரின் இறுதி பிரசாரக் கூட்டத்தில் அலைகடல் எனத் திரண்ட ஜனசமுத்திரம்!
( திருக்கோவிலிலிருந்து வி.ரி.சகாதேவராஜா)
திருக்கோவில் பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடும் பிரபல சமூக செயற்பாட்டாளரும் தொழிலதிபருமான சுந்தரலிங்கம் சசிகுமார் தலைமையிலான சுயேச்சை குழுவின் இறுதி தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் அலைகடல் எனத் திரண்ட ஜனசமுத்திரம்.
இவ் இறுதி பிரசாரக் கூட்டம் திருக்கோவில் கிராமத்தில் தேர்தல் பரப்புரை நேற்று (3) சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
தம்பட்டை தொடக்கம் உமிரி வரையிலான தானாக சேர்ந்த மக்கள் வெள்ளத்தினால் கூட்டம் களைகட்டியது.
இதில் சுயேட்சை குழு வேட்பாளர்களும் எதிர்கால திட்டங்கள் பற்றி ஆக்ரோஷமாக உரையாற்றினார்கள்.
இறுதியில் தலைமை வேட்பாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் உரையாற்றியபோது கரகோஷம் பிரதேசத்தையே அதிரச் செய்தது.
மக்கள் தாமாக முன்வந்து மலர்மாலைகளை ஆளுயரப் போட்டு ஆதரவை தெரிவித்தனர்.










