உள்ளூராட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி வர்த்தமானி அறிவித்தல் நாளை அல்லது நாளை மறுநாளே வெளியிடப்படும் என ஏற்கனவே அரச அச்சீட்டாளர் கங்கானி கல்பானி தெரிவித்திருந்தார்.

இருந்தபோதும், குறித்த அறிவித்தல் சற்று முன் வெளியிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தலில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் திகதியும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.