செம்மணி மனித புதைகுழி: 40 மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு
இன்று பேசு பொருளாக உள்ள விடயம் செம்மணி மனித புதைகுழி மனிதாபிமானம் உள்ள அனைவரையும் ஒரு கணம் உறைய வகை;கும் தகவல்கள். இந்த புதைகுழியில் பெரியவர்களுடன் குழந்தைகளின் என சந்தேககிக்கப்படும் எழும்புக்கூடுகளும் விளையாட்டுப் பொருட்களும் கூடவே மீட்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இதுவரை 40 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ் நீதவான் நீதிமன்ற நீதிபதி யு.யு. ஆனந்தராஜா, தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ் சோமதேவா, மற்றும் சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் மேற்பார்வையில் அகழ்வுப் பணிகள் தொடர்கின்றன.
இதுவரை 34 முழுமையான மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மேலதிகமாக, 6 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் இரண்டு எலும்புக்கூடுகள் குழந்தைகளுடையதாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்ட 34 எலும்புக்கூட்டுத் தொகுதிகளும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தடயவியல் மற்றும் மானிடவியல் பிரிவில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை செம்மணி புதைகுழி அகழ்வு ஆய்வு விடயங்களுக்கு அரசாங்கத்தின் ஆதரவு இருக்கும் எனவும் அரச தரப்பில் கூறப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
நீதி கிடைக்க வேண்டும் இந்த கொடூர செயலை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
சில இனவெறி மதவெறி பிடித்த இனவாதிகள் இதே மொழி பேசிக்கொண்டு சமூக ஊடகங்களில் இடப்படும் பதிவுகள் அவர்களின் கீழ்த்தரமான எண்ணங்களை வெளிப்படுத்துகின்றது இது மனித நேயம்மிக்க மக்கள் மத்தியில் கடும் வேதiனையை ஏற்படுத்துவதாக உள்ளது