Category: பிரதான செய்தி

போதைப்பொருட்கள் ஆயுதங்கள் மீட்பு – பாதாளத்தில் இருந்து நாட்டை மீட்கும் அநுர அரசின் நடவடிக்கைகள் தீவிரம் – ஜனாதிபதியின் பாதுகாப்பும் அதிகரிப்பு

நேற்றையதினம் (22)தங்காலை பிரதேசத்தில் மூன்று லொறிகளில் போதைப்பொருள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தங்காலை, சீனிமோதர பகுதியில் 2 சடலங்கள் மீட்கப்பட்ட வீடொன்றில், உயிருக்கு போராடிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து உயிரிழந்த நபரின் இரண்டு மகன்களே…

சிறப்புக் கட்டுரை – மகிமை பொருந்திய நவராத்திரி விரதம் ஆரம்பம்.. வி.ரி. சகாதேவராஜா

இன்று மகிமை பொருந்திய நவராத்திரி விரதம் ஆரம்பம்.. நவராத்திரி பண்டிகை புரட்டாசி அமாவாசை முடிந்து பிரதமை தொடங்கி தசமி வரை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மாசி மாதத்தில் சிவனுக்கு சிவராத்திரி கொண்டாடுவது போல புரட்டாசியில் ஒன்பது நாட்கள் சக்தியை வழிபட நவராத்திரி பண்டிகை…

எதிர்வரும் தமிழ் சிங்கள புது வருடமளவில் புறக்கோட்டை பஸ் நிலையத்தை நவீன மயப்படுத்தும் பணிகளை பூரணப்படுத்த முனைகிறோம்.

எதிர்வரும் தமிழ் சிங்கள புது வருடமளவில் புறக்கோட்டை பஸ் நிலையத்தை நவீன மயப்படுத்தும் பணிகளை நிறைவு செய்வதற்கு எதிர்பார்ப்பதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார். புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தை நவீன மயப்படுத்தும் பணிகளை ஆரம்பிப்பதற்காக இன்று (15) நடைபெற்ற…

அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்று ஒருவருட பூர்த்தி; இன்று யாழ் விஜயம் ;முக்கிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதன்போது சில முக்கிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன. அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்று ஒருவருட பூர்த்தியை முன்னிட்டு ஆரம்பிக்கப்படவுள்ள செயற்பாடுகளின் முதற்கட்ட நடவடிக்கைகள் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய,…

கோட்டாபய ராஜபக்ச மற்றும் சமன் ஏக்கநாயக்கவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளது.

நன்றி -ARVL கோட்டாபய ராஜபக்ச மற்றும் சமன் ஏக்கநாயக்கவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளது. ​முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலர் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் இரண்டு வெவ்வேறு விசாரணைகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத்…

இலங்கை வரலாற்றில் இன்டர்போலின் உதவியுடன் ஐவர் கைது

இந்தோனேசியாவில் ஐந்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் ஒரே நேரத்தில் கைது செய்யப்படுவது வரலாற்றில் முதல் முறை என்று பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய கூறுகியுள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்வது தொடர்பாக இன்று (28) காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற…

நாடகமாடினாரா ரணில்..? உதவி செய்தாரா உதவிப் பணிப்பாளர்..??

ரணில் கைது செய்யப்பட்டு, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டு, தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றார். ரணில் CID ற்கு செல்லுகின்ற போதும், நீதிமன்றத்திற்கு செல்லுகின்ற போதும் ஆரோக்கியமானவராகவே செல்கின்றார். ஆனால் நீதிமன்ற உத்தரவின்பின், அவர் சிறைச்சாலை வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு, மறுநாள் அதிகாலை, கொழும்பு…

ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிணையில் செல்ல கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று பிற்பகல் கொழும்பு கோட்டை…

ராஜபக்ஷக்களுக்கு எதிராகவும் நடவடிக்கை விரைவில் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் வெளிநாட்டுப் பயணத்தின்போது அரச நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டமை நிரூபணமாகியுள்ளதன் பிரகாரமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவிற்கு மாத்திரமல்ல, விரைவில் ராஜபக்ஷக்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.…

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பை கைவிட்டனர்!

நாடு தழுவிய ரீதியில் இன்று (25) முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பை கைவிட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் வழங்கப்பட்ட எழுத்து மூல உறுதியை அடுத்து இந்த தொழிற்சங்க போராட்டத்தை கைவிடுவதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.…