கோமாரியில் மீனவர் குடிசைகளை கடல் காவு கொண்டது!
( வி.ரி.சகாதேவராஜா)
பொத்துவிலை அடுத்துள்ள கோமாரிப் பிரதேசத்தில் கடல் சீற்றத்தால் அங்கிருந்த மீனவர்கள் குடிசைகள் கடலுக்குள் காவு கொள்ளப்பட்டிருக்கின்றன.
இன்று காலையில் எழுந்து பார்த்த மீனவர்கள் தமது குடிசைகளை காணாது அதிர்ச்சி அடைந்தார்கள். குடிசைகள் கடலுக்குள் அள்ளுண்டு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இருந்த படகுகளை வீதி வரை இழுத்து பாதுகாப்பாக வைத்திருக்கின்றார்கள்.
இன்றும் கடலில் சீற்றமாக காணப்பட்டது. மீனவர்கள் கடற்றொழிலை இழந்து இருக்கிறார்கள் என பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் பி.சுபோதரன் தெரிவித்தார்.



