நங்கூரமிட்டு அலேர்ட் அடித்தோம்; யாரும் வரவில்லை – திகில் அனுபவம் பற்றி உயிர் தப்பிய மீனவர் சசி கருத்து
(சவுக்கடியிலிருந்து வி.ரி. சகாதேவராஜா) நேரம் நள்ளிரவு ஒரு மணி இருக்கும் .காற்று பலமாக வீசியது. அலைகள் ஓங்கி அடித்தன. செய்வதறியாது நங்கூரத்தை இறக்கி விட்டு அலேட்(Alert )(எச்சரிக்கை ஒலியை) அடித்தோம். யாரும் உதவ வருவார்கள் என்று நம்பி இருந்தோம் .ஆனால் ஏமாற்றமே…
