செயற்கையாக எரிபொருள் தட்டுப்பாட்டை உருவாக்கும் சில சிந்தியாதோர்
மத்திய கிழக்கு நாட்டில் உருவாகியுள்ள போர்ச்சூழ்நிலையை தொடர்ந்து இலங்கையின் பல இடங்களிலும் எரிபொருளுக்காக வரிசையில் நிற்பதை அவதானிக்க முடிகிறது.
எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமோ எனும் வீணான அச்சத்துடன் எரிபொருள் நிலையங்களுக்கு மக்கள் தேவைக்கு அதிகமாக முண்டியடித்து கொள்வனவு செய்ய செல்வதனால் செயற்கையாக எரிபொருள் தட்டுப்பாடு உருவாகியுள்ளது. இது அநாவசியமான சிரமங்களை உருவாக்கும் செயற்பாடாகும்.
எரிபொருள் ஒரு மாதத்திற்கு மேலாக கையிருப்பு உள்ளது ஆகவே மக்கள’ அச்சமடையத்தேவையில்லை என அரசாங்கமும், உரிய அதிகாரிகளும் அறிவித்தும் மக்கள் எரிபொருள் நிலையத்தில் தேவைக்கு அதிகமாக குவிவதால் வீண் சிரமங்களை அனைவரும் எதிர்கொள்ளவேண்டியுள்ளது.
அத்துடன் கொள்கலன்களில் அதிக எரிபொருளை பெற்றுச்செல்லும் சம்பவங்களும் இடம் பெறுகிறது. சில எரிபொருள் நிலையங்களில் கொள்கலன்களில் விற்பனை செய்கின்றார்களோ எனும் சந்தேகமும் குற்றச்சாட்டும் உள்ளன. பொலிஸார் இவற்றை மிகவும் அவதானமாக கண்காணிக்க வேண்டும் என மக்கள் கோருகின்றனர்.
