Category: இலங்கை

கல்முனையில் பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் கோரிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது!

(கனகராசா சரவணன் ) கல்முனையில் பெண் ஒருவரை பாலியல் இலஞ்சம் கோரிய 59 வயதுடைய பொலிஸ் சப் இன்பெக்டர் ஒருவரை விடுதி ஒன்றில் வைத்து கொழும்பில் இருந்து வந்த இலஞ்ச ஓழிப்பு ஆணைக்குழுவால் நேற்று புதன்கிழமை (22) கைது செய்யப்பட்டுள்ளதாக கல்முனை…

சர்வதேச போட்டியில் சாதனை படைத்த 75 வயது அகிலம் அம்மா!

75 வயதில் வெறும் காலுடன் ஓடி சாதனை படைத்த அகிலம் அம்மா!. அண்மையில் பிலிப்பைன்ஸ் இல் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட முள்ளியவளை, முல்லைத்தீவை சேர்ந்த திருமதி அகிலத்திருநாயகி (ஓய்வு பெற்ற சிறைச்சாலைகள்…

ஓந்தாச்சிமடம் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இரத்ததான முகாம்!

“வேற்றுமையில்லா இரத்தத்தை தானம் செய்து மனிதத்தை போற்றுவோம்” எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் இரத்த பற்றாக்குறைக்கு உதவும் நோக்கில் ஓந்தாச்சிமடம் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் 19/11/2023 அன்று மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது. இந்த…

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் உத்தியோகத்தர்களுக்கு புதிய சீருடை அறிமுக நிகழ்வு

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் உத்தியோகத்தர்களுக்கு புதிய சீருடை அறிமுக நிகழ்வு (ஏ.எல்.எம்.ஷினாஸ்) நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் அலுவலக உத்தியோகத்தர்களுக்கான புதிய சீருடை அறிமுக நிகழ்வு பிரதேச செயலாளர் ஆர். ராகுலநாயகி தலைமையில் இன்று (20) நடைபெற்றது. புதிய சீருடை அறிமுக நிகழ்வின்…

பரத கலையை கொச்சைப்படுத்திய மௌலவிக்கு தேசிய இளைஞர் பாராளுமன்ற அமர்வில் கண்டனம்!

தேசிய இளைஞர் பாராளுமன்ற அமர்வில் பரதக் கலை தொடர்பில் அவதூராக பேசிய மௌலவிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தேசிய இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரான கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவை பிரதிநித்துவப்படுத்தும் வி. சரன்தாஸ் தனது கண்டனத்தை அமர்வில் பதிவு செய்தார். தேசிய…

பரதக் கலையை கொச்சைப்படுத்திய மௌலவிக்கு எதிராக மட்டக்களப்பில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

பரதக் கலையை கொச்சைப்படுத்திய மௌலவிக்கு எதிராக மட்டக்களப்பில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்! தமிழரின் தெய்வீக கலைகளில் ஒன்றான பரத கலையை சமூக ஊடகத்தில் கொச்சைப்படுத்தி காணொளி வெளியிட்ட அக்கரைப்பற்று மௌலவிக்கு எதிராக பல எதிர்ப்புக்கள் மேலோங்கி உள்ளன. நேற்று புதன்கிழமை மட்டக்களப்பு விபுலாநந்த…

இலங்கை தமிழரசு கட்சியின் கொழும்பு மாவட்டக் கிளையின் தலைவராக மீண்டும் கே. வி. தவராசா

இலங்கை தமிழரசு கட்சியின் கொழும்பு மாவட்டக் கிளையின் 2023/24 ஆண்டுக்கான புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள் தெரிவு இன்று மாலை கொழும்பு 4 பம்பலபிட்டி சனசமூக நிலையத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் கொழும்புமாவட்டக்கிளைக்கான புதிய நிர்வாக குழு தேர்வு…

அம்பாறை புத்தங்கல வீதியிலுள்ள கழிவு மறுசுழற்சி நிலையம் தொடர்பில் ஆராய்வு!

பாறுக் ஷிஹான் அம்பாறை புத்தங்கல வீதியிலுள்ள கழிவு மறுசுழற்சி நிலையம் தொடர்பில் அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான டபிள்யூ.டீ.வீரசிங்க ஆராய்ந்துள்ளார். அம்பாறை பிரதிப் பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜய ஸ்ரீ அழைப்பின் பேரில் இன்று அப்பகுதிக்கு விஜயம்…

மயிலத்தமடு பகுதியில் சட்டவிரோத குடியேற்றவாசிகளை உடன் வெளியேறுமாறு நீதிமன்றம் தீர்ப்பளிப்பு

மட்டு மேச்சல்தரை மயிலத்தமடு பகுதியில் சட்டவிரோத குடியேற்றவாசிகளை உடன் வெளியேறுமாறு நீதிமன்றம் தீர்ப்பளிப்பு (கனகராசா சரவணன்) மட்டக்களப்பு மேச்சல் தரை பகுதியான மயிலத்தமடு மாதவனை பகுதி அரசகாணியில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை உடனடியாக வெளியேறுமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் அன்வர்…

ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட இருவரை கைது செய்ய உத்தரவு

ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட இருவரை உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த உத்தரவை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்தப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது ஹிருணிகா பிரேமச்சந்திர நீதிமன்றில் முன்னிலையாகி…