இரா.சம்பந்தருக்கு இறுதி அஞ்சலி நிகழ்வு இன்று திருமலையில் – ஜனாதிபதி பிரதமர் உட்பட பல அரசியல் தலைவர்களும் பங்கேற்பு

இரா.சம்பந்தரின் புகலுடலுக்கு இறுதி அஞ்சலியும் இறுதிக்கிரியையும் இன்று திருகோணமலையில் இடம் பெறுகிறது.

இந்நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள்கலந்துகொள்ளவுள்ளனர்.
பெருந்தலைவர் சம்பந்தனின் புகழுடல் அன்னாரின் திருகோணமலை இல்லத்தில் நேற்றுமுன்தினம் தொடக்கம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.


இன்று நண்பகல் 12 மணிக்கு முன்பாக இறுதி அஞ்சலிகளைச் செலுத்துமாறு
பொதுமக்கள் வேண்டப்படுகின்றார்கள்.சமயச் சடங்குகள் அதன்பின் ஆரம்பமாகும். அஞ்சலிக் கூட்டமும் பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகி அன்னாரின் புகழுடல் தகனத்துக்காக மாலை 3 மணிக்கு திருகோணமலை இந்து மயானத்துக்கு
எடுத்துச் செல்லப்படவுள்ளது.