கல்முனை உவெஸ்லி உயர்தர (தேசிய) பாடசாலையின் 141 ஆவது ஸ்தாபகர் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் இடம் பெற்றது.

கல்லூரி அதிபர் எஸ். கலையரசன் அவர்களின் வழி நடத்தலில் பாடசாலையில் கடந்த 29 ஆம் திகதி இடம் பெற்றது.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை, கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஆகியவற்றின் பங்கு பற்றுதலுடன் இடம் பெற்ற இவ் இரத்ததான முகாமில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டு குருதிக் கொடை வழங்கினர்.