கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவு திறந்து வைப்பு

நூருல் ஹுதா உமர்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் புதிதாக கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு (Monitoring & Evaluation Unit) பிரிவு திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த பிரிவினை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்வு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது பிராந்திய பணிப்பாளர் நாடா வெட்டி புதிய பிரிவினை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் பிராந்திய பிரிவு தலைவர்கள், பணிமனையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அனுமதியுடன் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்முனை பிராந்தியத்தில் சுகாதார ரீதியாக மேலும் பல்வேறு பணிகளை முன்னெடுப்பதற்கு குறித்த பிரிவு ஒரு சந்தர்ப்பமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.